உலகம்

பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

(UTV | சுவிட்சலாந்து) –  கொரோனா வைரசுக்கு எதிரான ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தா உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இது ஒரு முக்கியமான கட்டமாகும் என்பதுடன், ஐ.நா.வின் சுகாதார ஸ்தாபனம் இந்த தடுப்பூசியை வளரும் நாடுகளில் எளிதில் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவால், பைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பு மருந்துகள் முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.

யுனிசெஃப் மற்றும் பான்-அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் போன்ற குழுக்களும் தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான தடுப்பூசியை கொள்வனவு செய்ய இது அனுமதிக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டிய இந்த தடுப்பூசி ஏற்கனவே அமெரிக்கா, கனடா, கத்தார், பஹ்ரைன் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் நிர்வகிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆப்கானிஸ்தானில் தாலிபானின் இடைக்கால அமைச்சரவை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்தது

Nike அதன் தயாரிப்பு விற்பனைகளை நிறுத்தியது