வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் பாவனையாளர்களுக்கான ஓர் முக்கிய செய்தி..!!

(UTV|COLOMBO)-பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சுக்கர்பேர்க் ஒப்பு கொண்டுள்ளார்.

கேம்பிரிஜ் ஆய்வுக்குழுவினால் 50 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுக்கர்பேர்க், மிகப்பெரிய நம்பிக்கை முறியடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்கள் ‘அறுவடை’ செய்யப்படுகின்றமைக்கு எதிராக புதிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தங்களுக்கு இருக்கிறது.

அவ்வாறு பாதுகாக்க முடியாத பட்சத்தில், தங்களால் சேவை வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை அறுவடை செய்த எப் எனப்படும் செயலிகள் தொடர்பான பரந்த அளவிலான விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய செயலிகளை உருவாக்குகின்றவர்கள், பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசிக்கும் எல்லையை வரையறை செய்யவும், பல்வேறு தடைகளை அமுலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் புதிய செயலிகளை உருவாக்குகின்றவர்கள், பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசிக்கும் எல்லையை வரையறை செய்யவும், பல்வேறு தடைகளை அமுலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

හිටපු නියෝජ්‍ය පොලිස්පතිවරයෙකුට වසර තුනක සිරදඬුවමක්

මරණ දඬුවම අහෝසි කිරීමේ යෝජනාව පාර්ලිමේන්තුවට

Chandana Katriarachchi appointed new SLFP Organiser for Borella