வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்

(UTV|ENGLAND)-வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன ஜனாதிபதி உறுதி

வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் தீ