வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தடை…

வெள்ளையின தேசிய வாதம் மற்றும் பிரிவினை வாத நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் தடைசெய்யவுள்ளது.

இதற்கமைய அடுத்த வாரம் முதல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வெள்ளையின தேசியவாதம் மற்றும் பிரிவினை வாதம் சார்ந்தக் கருத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளையின தேசியவாதம் மற்றும் பிரிவினை வாதம் குறித்த கருத்துக்களை போற்றுதல், ஆதரித்தல் மற்றும் பிரதிபலித்தல் என்பன தடைசெய்யப்பட்ட பதிவுகளாக்கப்பட்டு நீக்கப்படும்.

இதற்கான தொழிட்நுட்பத்தை பேஸ்புக் நிறுவனம் தற்போது வடிவமைத்துள்ளது.

நியுசிலாந்தில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது வெள்ளையின வலதுசாரி தீவிரவாத போக்குடைய ஒருவரே தாக்குதல் நடத்தி பலரை கொலை செய்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்

நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் பலி

New hotlines to inform police about disaster situation