சூடான செய்திகள் 1

பேலியகொட பரிமாற்றிடம் நாளை முதல்

(UTV|COLOMBO)-புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் புதிய களனி பாலத்தின் அருகில், களனி மற்றும் வத்தளைக்கான வாகன வௌியேற்றமாக உபயோகிக்கப்படுகின்ற கொழும்பு – கண்டி பாதைக்கான இணைப்பு வௌியேற்றம் நாளை(10) முதல் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று பயணிக்க முடியுமான அதேவேளை களனி மற்றும் வத்தளை நோக்கி பயணிக்க களனி பாலம் அருகில் உள்ள வௌியேற்றத்தை உபயோகிக்கும் சாரதிகளுக்கு மாற்றுப் பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து களனி மற்றும் பேலியகொட நோக்கிப் பயணிப்பதற்கு பேலியகொட பரிமாற்றத்தை பயன்படுத்தி கொழும்பு – கண்டி வீதிக்கு (A1) உட்பிரவேசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதன்படி கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து வத்தளை மற்றும் பேலியகொட நோக்கிப் பயணிப்பதற்கு பேலியகொட பரிமாற்றத்தைப் பயன்படுத்தி கொழும்பு – நீர்கொழும்பு (A3) வீதிக்கு பிரவேசிக்கலாம் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஐ.தே.கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி அகில போட்டி

விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

பெற்றோல் விலை அதிகரிப்பு!!