உள்நாடு

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய ஆலோசனை

(UTV | கொழும்பு) – முன்னாள் ஆளுநர் மைத்திரி குணரத்னவின் மகனான மிகார குணரத்ன மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா எழுத்து மூலம் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 04 பேர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மிகார குணரத்ன மீது கடந்த 25 ஆம் திகதி பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்

வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் அழுகுரலை கேளுங்கள் – கிழக்கின் கேடயம்!

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி