உள்நாடு

பேரூந்து விபத்து உயிரிழந்தோருக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு

(UTV|BADULLA) – பசறை – மடூல்சீமை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு வழங்கப்படும் என போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேரூந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

Related posts

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை

மேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு

கடும் மழை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை