வகைப்படுத்தப்படாத

பேரூந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

(UTV|KENYA) கென்யா நாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பேரூந்து விபத்தில் குழந்தை, பெண்கள் உட்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி பேரூந்து ஒன்று லாரி மீது வேகமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தகவலறிந்து பொலிசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

மரண தண்டனையில் இருந்து தப்பிய ஐரோப்பிய கர்ப்பிணி பசு

President, Premier seeks stronger ties with UK

හිස්බුල්ලා පොලිස් මුල්‍ය අපරාධ කොට්ඨාශයට