உள்நாடு

பேரூந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இணையாக பேருந்து பயண கட்டணங்களை மீண்டும் குறைப்பது பயனற்ற விடயம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மீண்டும் டீசல் விலை குறையும் பட்சத்தில் பேருந்து பயண கட்டணம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்ட முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 430 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணிமுதல் அமுலாகும் வகையில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

எனினும், ஏனைய எரிபொருட்களின் விலை மாற்றமின்றி தொடரும் என கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் விலைக்கு அமைய லங்கா ஐஓசியும் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் வெள்ளியன்று

இராஜகிரிய வாகன விபத்து – இருவருக்கு பிணை

டான் பிரியசாத் CID இனால் கைது