உள்நாடு

பேருந்து விபத்தில் 36 மாணவர்கள் காயம் !

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு தொடர்பில் ஷவேந்திர கருத்து

உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர்!

எண்ணெய் விலை குறித்து அமைச்சர் ஒரு அறிக்கை