உலகம்

பேருந்து விபத்தில் 27 பேர் பலி – 20 பேர் காயம்

(UTV | பீஜிங்) – கொவிட் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு சீன பிரஜைகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கடுமையான விபத்தில் சிக்கியதில் 27 பேர் பலியாகியுள்ளதோடு மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் கொவிட் தொடர்பாக நாடு கடைப்பிடிக்கும் கடுமையான கொள்கைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது.

பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தபோதிலும், இதுவரையில் விபத்துக்கான காரணம் வெளிவரவில்லை.

உலகின் பல நாடுகள் தற்போது கொவிட் நோயுடன் வாழ்வதை சரிசெய்து வருகின்றன, ஆனால் சீனா இன்னும் அது தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

பெரிய அளவிலான கொவிட் பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தடுத்து வைத்தல் ஆகியவை இதில் அடங்கும். பீஜிங்கில் வசிப்பவர்கள் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் கொவிட் சோதனைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டும்.

இந்த சோதனைக்கு ஆஜராகாத பட்சத்தில் மக்கள் பொது இடங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !

பிரணாப் முகர்ஜி காலமானார்

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு