வகைப்படுத்தப்படாத

பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 60 பேர் பலி

(UTV|INDIA)-தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப் பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைஅடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைத்தொடர்ந்து, பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, பேருந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் சீனிவாசராவ் சென்ற வாரம் சிறந்த ஓட்டுனர் விருது வாங்கியவர் என்பது தெரிய வந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரத்யேக சேவை நிலையத்தை காலியில் தொடங்கும் vivo

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் இழப்பீடு தர முடியாது-மார்க் சுக்கர்பெர்க்

எரி பொருட்களின் விலையில் மாற்றம்.?