உள்நாடு

பேருந்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது

(UTV|கொழும்பு) இன்று(12) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பேருந்து பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

Related posts

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்