உள்நாடு

பேருந்து – டிப்பர் மோதியதில் 26 பேர் காயம்

(UTV |  மூதூர்) – திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று (10) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், மூதூரிலிருந்து சேறுவில நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சதுர கலப்பத்தி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

editor

நாடு முழுவதும் மின்வெட்டு – நாளை வௌியாகவுள்ள தகவல்

editor

கடவுச்சீட்டு பெற வருபவர்களுக்கு விசேட சலுகை