உள்நாடுபிராந்தியம்

பேருந்து கவிழ்ந்து விபத்து – நான்கு பேர் காயம்

இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து கவிழ்ந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் பேருந்தும் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்த 180 பேர் வீட்டிற்கு

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

editor

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் – சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு