உள்நாடு

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விடுத்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமது பேருந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரமற்றவையென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜித – சத்துர இருவருக்கும் கொழும்பு குற்றவியல் பிரிவு அழைப்பு

இதுவரையில் 19 ‘டெல்டா’ தொற்றாளர்கள்

ஐக்கிய  மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு