உள்நாடு

பேருந்து கட்டணம் குறித்து நாளை தீர்மானம்

(UTV | கொழும்பு) – ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டணங்கள் தொடர்பில் நாளை (28) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேரூந்து கட்டணத்தை திருத்தியமைப்புடன் பேருந்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாவின் முறையற்ற வேலைத்திட்டமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – ஆஷு மாரசிங்க

பரசூட் பறக்கும் போட்டியில் இராணுவ வீரர் சாதனை

அத்தியாவசிய பொருட்கள் 10 இனை இறக்குமதி செய்ய அனுமதி