உள்நாடு

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கலாம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில், பேருந்து கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்;

“தற்போது பேருந்து கட்டணம் அல்லது டீசல் விலையை உயர்த்தும் நோக்கம் இல்லை. ஆனால் டீசல் விலை அதிகரித்தால் பேரூந்து உரிமையாளர்களது கோரிக்கையினை கருத்தில் கொள்ள வேண்டும்..”

முந்தைய எரிபொருள் விலை அதிகரிப்பின் போது பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை அதிகரிக்கக் கோரினர், நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக விலை அதிகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கம் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முகநூல் பதிவு குறித்து விஜயதாசவிடம் இருந்து முறைப்பாடு

நீர் விநியோகம் சில மணித்தியாலங்களில் முழுமையாக வழமைக்கு

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்