உள்நாடு

பேரிச்சம் பழத்திற்கான வரி குறைப்பு!

எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான விசேட வரி எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பேரிச்சம்பழம் கிலோகிராம் ஒன்றிற்கு தற்போது விதிக்கப்படும் ரூ. 200 விஷேட வர்த்தக வரி 1 ரூபாயாக குறைக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

Related posts

ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதி

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!