உள்நாடு

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

(UTV | பேராதனை) –  பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அதுல சேனாரத்னவின் வீட்டுக்கு முன்பாக நேற்று ( 10) இரவு 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பேராசிரியர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மைதானத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் சிக்கியதுடன், விபத்துக்கு காரணமான முன்னாள் துணைவேந்தரின் மகன் செலுத்திச் சென்ற கார் தப்பிச் சென்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பேராதனை பொலிஸார் மாணவர்களை கலைத்துவிட்டு, பேராசிரியரை பொலிஸ் பாதுகாப்பில் மீட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பேராசிரியர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது மகனும் தாக்குதலுக்குள்ளான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் – இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு