கேளிக்கை

பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகர்

(UTV|INDIA) – பிரபல நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா காட்டாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷ்ணுவிஷால் 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

புத்தாண்டு தினத்தன்று இவர்கள் கொண்டாடி மகிழ்ந்த சில புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்ப தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

சின்மயியை சும்மா விடமாட்டேன்

சீனாவில் ரிலீஸாகவுள்ள ரஜினியின் 2.0

வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு: பாட்ஷாவின் சாதனை