உள்நாடுவணிகம்

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) –தோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி உற்பத்தி உணவுவகைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்குச்சட்டம் காரணமாக மக்களின் உணவுத்தேவையின் ஒருபகுதியாக பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களை அவர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

Related posts

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு

நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி கண்டு வருகிறது – அரசாங்கத்தை விமர்சித்து, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தால் நேராக சிறைக்குத் தான் செல்ல நேரிடும் – சஜித் பிரேமதாச

editor