கேளிக்கை

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இலங்கையில்

(UTV | இந்தியா) – மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் இலங்கையில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந் நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக படக்குழுவினர் வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும், ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த`விவேகம்’ டீசர்