உள்நாடு

பொதுத் தேர்தல் – வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இன்று(06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மூன்று கட்டங்களின் அடிப்படையில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 09 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை தெரிவு செய்துக் கொள்வதற்காக இடம்பெற்ற வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றது.

Related posts

பல மாதங்களாக நீடித்த லாஃப் சமையல் எரிவாயு தட்டுப்பாடு வழமைக்கு

editor

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

அமைச்சரவை தீர்மானங்கள் [2021-02-08]