உலகம்உள்நாடு

பெற்ற கடனை மீள் செலுத்த கால அவகாசம்

(UTV | பங்களாதேஷ்) –  பெற்ற கடனை மீள் செலுத்த கால அவகாசம்

நாட்டுக்கு வழங்கிய கடன் தொகையை செலுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

கடன் தொகையை செலுத்துவதற்கு இதுவே கடைசி கால அவகாசம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை (அந்நியச் செலாவணி வசதியின் கீழ், ) கடன் தொகையை வழங்கியதுடன் அதனை திருப்பிச் செலுத்துவதற்கு மேலதிகமாக 6 மாத கால அவகாசத்தையும் பங்களாதேஷ் அரசாங்கம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடன் காலத்தை மேலும் நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன், அதன்படி கடன் காலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

அசோக ரன்வலவின் இராஜினாமா தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

editor

புதிய 4,718 அதிபர் நியமனங்கள் :கல்வி அமைச்சர்