உள்நாடு

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

புதிய அமைச்சருக்கு தாம் விருப்பமான சபையொன்றை நியமிப்பதற்கு சுதந்திரம் வழங்குவதற்காக அவர் தனது பதவிகளை இராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகள்

editor

வெளிநாட்டு தொழில்களில் இருந்து பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!