உள்நாடு

பெற்றோரின் கவனயீனத்தால் வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தேக்கத்தில் விழுந்து பரிதாபமாக பலியான குழந்தை

19 மாத குழந்தை ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தேக்கத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாத்துவ – தல்பிட்டிய பகுதியில் வசிக்கும் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தாயும் தந்தையும் வீட்டில் இருந்த தருணத்தில், வீட்டின் முன் திறந்த வெளியில் தண்ணீர் தேக்கத்தின் அருகே குழந்தை இருந்துள்ளதாகவும், சிறிது நேரத்தின் பின் குழந்தையை காணவில்லை என தேடியபோதே குழந்தை நீரில் வீழ்ந்துள்ளமை தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் சூரிய கிரகணம்?

போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது

இன்றைய நாளுக்கான மின்வெட்டு