உள்நாடு

பெறுபேற்றை அங்கீகரித்து வழங்கும் இணையத்தள சேவை அறிமுகம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதல்தடவையாக பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய, இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் இந்த உறுதிப்படுத்தும் சேவை முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக விண்ணப்பதாரர்கள் தமது பெறுபேற்றை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த சேவையினூடாக 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்கீழ் வௌிநாட்டு பல்கலைக்கழகங்கள், வௌிநாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பரீட்சை விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அங்கீகரித்து உறுதிசெய்யப்பட்ட ஆவணங்கள் இணையத்தளத்தினூடாக வழங்கப்படவுள்ளன.

Related posts

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்!

சவூதி இளவரசர் ஜனாதிபதி ரணிலிடமிருந்து எழுத்துமூல செய்தியைப் பெற்றுக் கொண்டார்