வகைப்படுத்தப்படாத

பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

(UTV|INDIA)-ஹூரன் மற்றும் பார்க்ளேஸ் ஆகிய நிதிச்சேவை நிறுவனங்கள் இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹூரன் இந்தியா ரிச் லிஸ்ட் (2018) என்ற அந்தப் பட்டியலில் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.1,000 கோடி அளவிற்கு கொண்ட 831 இந்தியர்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தப் பட்டியலில் மேலும் 214 இந்தியர்கள் இணைந்துள்ளனர். இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் அவர் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.3.71 லட்சம் கோடியாகும். இந்நிலையில் இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக நீடிக்கும் அவர், போர்ப்ஸ் வெளியிட்ட சர்வதேச மெகா பணக்காரர்கள் பட்டியலில் 19-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டில் அவர் 33-வது இடத்தில் இருந்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

115 வருட பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து

அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு

யூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா