உள்நாடு

பெரும்போகத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு

(UTV | கொழும்பு) – கடந்த 2020 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக ஒரு கிலோ கிராம் நெல்லை 75 ரூபாவிற்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது

10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிப்பு!

சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.