சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையில், இன்று(09) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக வடமத்தியமாகாணத்திலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

.

Related posts

Breaking – ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பி க்களின் எண்ணிக்கை ?

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்