வகைப்படுத்தப்படாத

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு, மாகாண ஆளுனரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

21 மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு, வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நேற்று ஆளுனரிடம் கையளித்தனர்.

இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ள உறுப்பினர்களை தற்போது உறுதி செய்து வருவதாகவும், அத்துடன் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு சந்தர்ப்பம் வழங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் தமது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், அவர் பதவி விலக்கப்பட்டு, புதிய முதலமைச்சரை நியமிக்க நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

HRW asks Govt. to end arbitrary arrests, abuses against Muslims

மிளகாய் பொடி தூவி கோடிக் கணக்கான பணம் கொள்ளை

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை