அரசியல்உள்நாடு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் – செந்தில் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மீதி 350 ரூபாயும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கும் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி – ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில்.

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபாலவை நீக்குவதற்கு தடை உத்தரவு