29 கிலோகிராம் ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த நபரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 400 மில்லியன் ரூபா என கூறப்படுகிறது.