அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!

(UTV | கொழும்பு) –

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இரா.சம்பந்தனின் சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது.

வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா. சம்பந்தன் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு தமது 91 ஆவது வயதில் காலமானார்.

இதனையடுத்து, கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் புதன்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், அவரின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதையடுத்து, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நண்பகல் 12.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பின்னர் அவரின் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை

டொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு

எல்பிட்டியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது