உள்நாடு

பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் கை கால்கள் கட்டப்பட்டு கொலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் நேற்று (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

75 வயதுடைய குறித்த நபர் ஹெட்டிமுல்ல – புலுருப்ப பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

அவரது மனைவி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு, வீட்டில் இருந்த அலமாரிகள் அனைத்தும் திறந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களின் தாக்குதலால் குறித்த பெண்ணும் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்களது திருடப்பட்ட கார் பின்தெனிய பொலிஸ் பிரிவில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு …

அதி சொகுசு பேரூந்துகளின் கட்டண நிர்ணயம் குறித்து ஆலோசனை

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்