உள்நாடு

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம் – கையடக்க தொலைபேசியை தேடும் வேட்டை – கைக்குண்டு சிக்கியது

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை கல்னேவ பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வைத்தியரின் தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டறியும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (13) அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு!

திங்களன்று துக்க தினமாக அனுஷ்டிக்கவும் – ரிஷாத் கோரிக்கை

பிரியமாலியுடன் பணியாற்றிய 3 பிரபல நடிகைகள் CID இற்கு