உள்நாடுசூடான செய்திகள் 1

பெண் காழி நீதிபதிகளை நியமிக்க ஜம்மியதுல் உலமா ஏற்றுக்கொண்டது – ரவூப் ஹகீம்

(UTV | கொழும்பு) –

நீதியமைச்சினால் புதிதாக திருத்தப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்தச் சட்டமூலத்தில், பெண்களை காழி நீதிபதிகளாக நியமிக்க ஜம்மியதுல் உலமா ஏற்றுக்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துதெரிவிக்கையில்,

“நீதியமைச்சின் முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச் சட்டத்தின் போது, ‘முஸ்லிம்’ என்ற பதம் நீக்கப்பட்டவை ஏற்கமுடியாது, அதில் வெளிப்படத்தன்மை பேணப்பட வேண்டுமெனவும், மாவட்ட நீதிமன்றிற்கு இஸ்லாமிய மரபுரிமை கொண்டு செல்ல நாம் ஏற்கவில்லை. பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும், பெண் காழி நீதிபதிகளை நியமிப்பதில் எந்த தவறுமில்லை. அதுபோல் பெண் காழி நீதிபதிகளை நியமிக்கும் கருத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை ஆரம்பத்தில் கருத்து முரண்பாடுகளை கொண்டிருந்தாலும், இப்போது அவர்கள் இல்கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளமையானது நல்ல விடயம்.”

மேலும், அனைத்து முஸ்லிம் தரப்புகளின் ஆதரவுடன் விரைவில் இச்சட்டம் அமுலாக்கப்படும்
எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

MMDAசட்ட திருத்தம் தொடர்பில், சட்டத்தரணிகளான ஷரீனா மற்றும் ஷிபானா ஆகியோர் வழங்கிய நேர்காணல் 👇🏾 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தோல்வியில் ரணில்

UPDATE – தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவருக்கு பிணை

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்தவின் பெயர் பரிந்துரை