வகைப்படுத்தப்படாத

பெண்ணொருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி

(UDHAYAM, COLOMBO) – பெண்ணொருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட நபரொருவர், இளைஞர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் கேகாலை காவற்துறை தலைமையகத்திற்கு இன்று தெரியவந்துள்ளது.

இன்று காலை 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலில், அம்பன்பிட்டிய – பரதெனிய பாதைக்கு அருகில் நபரொருவரின் சடலம் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காவற்துறை அந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தது.

இதன்போது அந்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் காவற்துறையிடம் சரணடைந்துள்ள நிலையில் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 50 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குறித்த நபர் அந்த பிரதேசத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து வந்துள்ள நிலையில், இவர் பெண்களின் உள்ளாடைகள் திருடுதல், பெண்கள் நீராடும் பகுதியில் திருட்டுதனமாக மறைந்து பார்த்தல் பேன்ற தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணொருவரிடம் குறித்த நபர் தவறாக நடக்க முற்பட்ட நிலையில் இதனை பார்த்த இளைஞர், கோபமடைந்து அவரை தாக்கியுள்ளார்.

எனினும் தான் குறித்த நபரை உயிரிழக்கும் அளவிற்கு தாக்கவில்லை என அந்த இளைஞர் காவற்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனவே உயிரிழந்த நபர் குறித்த இளைஞரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரா? என காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

உலகின் முதன் முதலாக பூமிக்கு அடியில் ஆடம்பர ஹோட்டல்

Rishad says “Muslim Ministers in no hurry to return”

அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி