சூடான செய்திகள் 1

பெண்ணின் கருப்பையை அகற்றுவது என்பது உணர்வுப்பூர்வமான விடயம் – சம்பிக ரணவக

(UTVNEWS | COLOMBO) -பெண்ணின் கருப்பையை அகற்றுவது என்பது சிங்கள மக்களுக்கு மாத்திரம் அல்ல உலகில் வாழும் எந்தவொரு இனத்தையும் பாதிக்க கூடிய உணர்வுப்பூர்வமான விடயமாகுமென தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக ரணவக, வைத்தியர் ஷாபி விவகாரத்தை விசாரணை என்ற பேரில் காலம் கடத்துவது சிங்கள பௌத்தர்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் அந்த இனத்தை சார்ந்த வைத்தியர்கள் குறித்தும் சந்தேகங்களுக்கே வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஹெட்டிபொல – படுவஸ்நுவர வாராந்த சந்தை தொகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக ரணவக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வைத்தியர் ஷாபி தொடர்பான பிரச்சினைக்கு ஒரு வார காலத்தில் தீர்வை காண முடியும். நீதிமன்றத்திற்கு சென்று பல வருட காலமாக இழுத்தடிப்பு செய்ய வேண்டிய விடயமல்ல. இலங்கை வைத்திய சபை மற்றும் அரசாங்கம் ஒன்றிணைந்து வைத்தியர் ஷாபி தொடர்பான பிரச்சினையை தீர்க்க முடியும்.

மேலும் சிங்கள மற்றும் தமிழ் வைத்தியர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சத்திர சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை வைத்தியர் ஷாபியுடன் மீளாய்வு செய்தால் மிக எளிதாக ஒரு தீர்மானத்திற்கு வந்து விட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன

களுத்துறை – தெம்புவன சம்பவம்-பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

பெருந்தோட்ட தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு