உள்நாடு

பெட்ரோலை குறைத்தாலும் நிவாரணம் இல்லை

(UTV | கொழும்பு) – பெட்ரோல் விலையை குறைப்பதன் மூலம் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்றும் டீசல் விலையை குறைப்பதன் மூலம் மட்டுமே மக்களுக்கு நிவாரணம் கிடைக்காது என அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் உட்பட மேலும் பல சங்கங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

டீசல் விலையை குறைக்க வாய்ப்புள்ள நிலையில் பெட்ரோல் விலையை மட்டும் குறைப்பது நியாயமானதல்ல என அகில இலங்கை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் ருவன் பிரசாத், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

Related posts

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்ன

editor

மின் துண்டிப்பால் ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் பாதிப்பு