உள்நாடு

“பூஸ்டர் வேலை செய்யுமாக இருந்தால் முகக்கவசம் தேவையில்லை”

(UTV | கொழும்பு) – இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி அல்லது மூன்றாவது டோஸ் பெற்றவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்குமேயானால், முகக் கவசங்கள் அணிவதை இல்லாமல் ஆக்கவும், விழாக்களை நடத்துவதற்கும் நாடு முழுமையாக திறக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி பல்வேறு கோரிக்கைகள் வந்தவண்ணமுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்று அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி விரும்பிய அளவை எட்டினால், அந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு சுகாதார விதிமுறைகளை தளர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹிருணிகாவின் மனு விசாரணை ஜூலை 15 இல்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனு மீளப்பெறப்பட்டுள்ளது

editor

கோட்டா கூறியதை மறுக்க முடியாது – மீண்டும் கார்டினல்