உள்நாடு

பூஜித மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விசாரணைகள் நிறைவு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.யூ.ஜயசூரிய முன்னிலையில் எடுத்துள்ளப்பட்டது

இவர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்தனர்.

Related posts

இலங்கை பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது மோதல்!

ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்