சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி; எதிரான அடிப்படை உரிமை மனுக்களது விசாரணைக்கு அனுமதி

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட சில தரப்பினருக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்த இன்று(02) உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மனுக்கள் உயர்நீதிமன்ற எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த 26 ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டு நிறைவு செய்த நிலையில், இன்று(02) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

464 பேருக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள்

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

இன்று (19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை