சூடான செய்திகள் 1

UPDATE- பூஜித் ஜெயசுந்தர சற்று முன்னர் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்

(UTV|COLOMBO)-பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சற்று முன்னர் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.


காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர முதல் தடவையாக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் குமாரவிடம் இருந்து பெறப்பட்டுள்ள குரற்பதிவுகளை ஆராயும் பொருட்டு, காவல்துறைமா அதிபரின் குரற்பதிவை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு காவல்துறைமா அதிபர் இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஆரியநந்த வெலி அங்ககே தெரிவித்துள்ளார்.

Related posts

எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

நாளைய தினம் ரணிலை பிரதமராக்க பாராளுமன்றில் நம்பிக்கைப் பிரேரணை