உள்நாடு

 புலமை பாரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  புலமை பாரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கான பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளிகள் மார்ச் 22 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய பின்னர் 153 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பிள்ளைகளுக்கு தரம் 6 – 2023க்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை அலுவல்கள்) லலித எகொடவெல தெரிவித்துள்ளார்.

153 புள்ளிகள் மற்றும் அதற்கு மேல் பெற்ற 48,257 மாணவர்களுக்கு வேறு பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் ,
ஒரு மாணவன் அல்லது மாணவி தனக்கு விருப்பமான 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்,
விண்ணப்பங்கள் கணினி தரவு அமைப்பில் உள்ளிடப்பட்டு, பாடசாலை தெரிவுக்கான கட்-ஓப் மதிப்பெண்கள் தரவை சரிபார்த்த பிறகு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்தப் பரீட்சைக்கு 329,668 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமையும் குறிபிடத்தக்கது. )

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club ஆயத்தம்

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!

வவுனியா, பாவற்குளம் பகுதியில் விபத்து – 7 வயது சிறுவன் பலி

editor