தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2025 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த பரீட்சை ஓகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பரீட்சைகள் ஆணையர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்த இதனைத் தெரிவித்தார்.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.