உள்நாடு

புற்று நோயாளர்களுக்கான கதிர்வீச்சு ஔடத உற்பத்தி நிலையத்தை அமைக்க அனுமதி

(UTV | கொழும்பு) – புற்று நோயாளர்களின் நலன் கருதி, சைக்லோரோன் கதிர்வீச்சு ஔடதங்கள் உற்பத்தி நிலையத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் ஊடாக, புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை வீதத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனைகளுக்காக ப்ளோரா டியொக்சி குளுகோஸ் எனும் மருந்து பயன்படுத்தப்படுகின்றது.

இதன்படி, குறித்த மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால், இந்தியாவினால் கொள்வனவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கவும், செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் குறித்த மருந்தின் ஊடாக, நோயாளர் ஒருவருக்கு 54,000 ரூபா செலவாகுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மருந்தை உள்நாட்டில் உற்பத்தி செய்வதின் ஊடாக, அதனை 14,000 ரூபா வரை குறைத்துக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மருந்து உற்பத்தி நிலையத்தை வேரஹரவில் அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின், வைத்தியசாலை வளாகத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

editor

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு : குற்றச்சாட்டுக்களை பொலிஸ் தலைமையகம் நிராகரிப்பு

ஒலுவில் துறைமுகம் இந்தியாவுக்கு விற்பனை? மோடியின் பிரதிநிதி விஜயத்திற்கு எதிர்ப்பு