உள்நாடு

புற்றுநோய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர்

(UTV | கொழும்பு) – புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்ளாடொக்ஸின் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை கண்டறிவதற்காக சந்தைகளில் பெறப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆய்வுக்காக பேராதனை பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 30 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் முடிவுகளே இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக குறித்த அதிகார சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், சந்தைகளில் பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்ளாடொக்ஸின் இரசாயனம் அடங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

கம்பஹா மாவட்டத்தின் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

editor

அனைத்து பல்கலைகழகங்களுக்கும் பூட்டு