உள்நாடு

புறக்கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடம் தனிமைப்படுத்தலுக்கு

(UTV – கொவிட் 19) – புறக்கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து குறித்த கட்டிடம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த தொற்றுக்குள்ளானவர் கடற்படையைச் சேர்ந்த வீரர் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், குறித்த கட்டிடத்தில் இருந்த சுமார் 200 கடற்படை வீரர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், வெலிசர கடற்படை முகாமில் தங்கி சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்களது உதவி ஒத்தாசைகளுக்கு உள்வாங்கப்பட்டவர் என்றும், அவர்கள் சமூகத்துடன் கலந்திருக்கவில்லை எனவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது

 Dr ஷாபி சிஹாப்தீன் மீண்டும் கடமையில்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு